நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

153-ஆவது சட்டப்பிரிவு பற்றி விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை: அன்வார் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயா: 

மத்திய அரசமைப்புச் சட்டத்தின் 153-வது பிரிவை அரசாங்கம் திருத்த வேண்டிய அவசியம் இல்லை.

இது பூமிபுத்ராவின் சிறப்பு நிலையைக் குறிக்கும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறினார்.

153-ஆவது சட்டப்பிரிவு எதிர்பார்த்தபடி செயல்படுகிறதா என்பதை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர் ஹசான் கரிமின் அழைப்பு குறித்து கேட்டபோது அவர் இவ்வாறு கூறினார்.

153-ஆவது பிரிவு உட்பட அரசியலமைப்பு நிலைப்பாட்டை தமது தரப்பு எப்போதும் பாதுகாக்கும். 

அதனால் இது குறித்து விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை. அது ஏற்கனவே அரசியலமைப்பில் உள்ளது என்று அன்வார் இன்று கோலாலம்பூரில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

முன்னதாக, பாசிர் கூடாங் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரவிருக்கும் பூமிபுத்ரா பொருளாதார காங்கிரஸில், சட்டப்பிரிவு 153 உண்மையில் பூமிபுத்தேராக்களுக்கு உதவுகிறதா அல்லது சில தேர்ந்தெடுக்கப்பட்ட உயரடுக்கினருக்கு மட்டுமே பிறருக்குப் பாதகமாகப் பயன் தருகிறதா என்பதை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக் கொண்டனர்.

சட்டப்பிரிவு 153 (1) சபா மற்றும் சரவாக் மாநிலங்களுக்கிடையில் மலாய்க்காரர்கள் மற்றும் பூர்வீகவாசிகளின் சிறப்பு நிலையையும் மற்ற இனங்களின் நியாயமான நலன்களையும் விதிகளின்படி பாதுகாப்பது மாமன்னரின் பொறுப்பாகும். 

- அஸ்வினி செந்தாமரை 

தொடர்புடைய செய்திகள்

+ - reset