நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

2026ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூரிலிருந்து புறப்படும் விமானப் பயணிகளுக்குக் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் 

சிங்கப்பூர்:

2026ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூரிலிருந்து புறப்படும் விமானங்கள் நீடித்த நிலைத்தன்மை எரிபொருளைப் பயன்படுத்துவது கட்டாயமாகவிருக்கிறது.

பயணிகள் விமான அனுமதிச்சீட்டு வாங்கும்போது அதில் தீர்வையும் செலுத்த வேண்டியிருக்கும். எனவே கட்டணம் உயரும் என்று எதிர்பார்க்கலாம்.

பயணம் செய்யும் தூரம், எந்தப் பிரிவில் பயணம் செய்கிறார்கள் ஆகியவற்றைப் பொறுத்துத் தீர்வையின் அளவு நிர்ணயிக்கப்படும்.

2026ஆம் ஆண்டில் நீடித்த நிலைத்தன்மை எரிபொருளின் அளவை ஒரு விழுக்காடு உயர்த்துவது சிங்கப்பூரின் முதற்கட்ட இலக்கு.

2030ஆம் ஆண்டுக்குள் 3% - 5% வரை உயர்த்தப்படும்.

அதற்கான செலவு கட்டுப்படியான அளவே என்று போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் (Chee Hong Tat) தெரிவித்தார்.

நீடித்த நிலைத்தன்மை எரிபொருளின் பயன்பாட்டை அது அதிகரிக்கும்.

அத்தகைய எரிபொருளின் உற்பத்தியாளர்கள் அதிக முதலீடு செய்யவும் புதிய ஏற்பாடு ஊக்குவிக்கும் என்றார் திரு. சீ.

விரிவாகப் பயன்படுத்தத் தொடங்கினால்தான் அந்தத் துறை வளரும் என்றும் அவர் சொன்னார்.

ஆதாரம்; மீடியா கோர்ப் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset