நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நன்கொடை பயன்பாடுகள் வெளிப்படையாக இருக்க வேண்டும்: பிரதமர்

கோலாலம்பூர்:

நாட்டில் உள்ள தொண்டு நிறுவனங்களுக்காக திரட்டப்படும் நிதியை நிர்வகிப்பதில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும்.

பிரதமர் டத்தோஸ்ரீ  அன்வார் இப்ராஹிம் இதனை தெரிவித்தார்.

தொண்டு நிறுவனங்கள் நிதி திரட்டும் போது, அவற்றின் இலக்கு தேவைப்படுபவரை சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்.

குறிப்பாக ஏற்கெனவே உள்ள விதிமுறைகளை அவர்கள் சரிவர கடைபிடிக்க வேண்டும்.

பொறுப்பற்ற தரப்பினரால் நிதி துஷ்பிரயோகம் செய்யப்படுவதைத் தடுக்க நிதியை நிர்வகிப்பதற்கு அரசாங்கம் எப்போதும் முன்னுரிமை அளிக்கும்.

தொண்டு நிதிகள் முறையான வழிகளில் செல்ல வேண்டும். அவற்றால் உரியவர்கள் பயன்பெற வேண்டும். 

அதே நேரத்தில் திரட்டப்பட்ட மற்றும் விநியோகிக்கப்படும் தொகை வெளிப்படைத்தன்மைக்காக பொதுவெளியில் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset