நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு: 1,000 விமானச் சேவைகள் ரத்து

நியூயார்க்: 

அமெரிக்காவில் கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத வகையில் அங்கு கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

இந்தப் பயங்கர பனிப்பொழிவு காரணமாக வெப்பநிலை மைனஸ் 30 டிகிரியைக் கடந்தது.

இதனால் முக்கிய நகரங்களில் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டு 1000 விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

தொடர்ந்து, சாலைகளிலும், ரயில் வழித்தடங்களிலும் பனித்துகள்கள் மலைகுவியல் போல் குவிந்ததால் சாலை மற்றும் ரயில் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

நேற்று ஒரே நாளில் அதிகபட்சமாக மாசாசூட்சின் பாஸ்டன் நகரில் 20 செ.மீ அளவுக்கு பனிப்பொழிவு ஏற்பட்டதாக தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக பனிப்புயல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் வரும் நாட்களில் பனிப்பொழிவு நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதனால் அவசியமின்றி பொதுமக்கள் வெளியே நடமாடுவதற்கு நியூயார்க் உள்ளிட்ட மாநிலங்கள் தடை விதித்துள்ளன.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset