செய்திகள் வணிகம்
மலேசியாவிலிருந்து வந்த 1500 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஆடைகள் பறிமுதல்
கொழும்பு:
மலேசியாவிலிருந்து நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட சந்தேகத்துக்கிடமான 4 கொள்கலன்கள் ஒருகொடவத்தை பகுதியில் உள்ள சரக்குப் பொருள் ஏற்றி இறக்கும் முனையத்தில் சுங்கப் பிரிவினரால் தடுத்து நிறுத்தப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது 1500 இலட்சம் ரூபாய் பெறுமதி மிக்க ஆடைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதன்போது கொள்கலன்களில் பிரபல நிறுவனம் ஒன்றிலிருந்து சுமார் 1,60,000 ஆடைகள் கொள்வனவு செய்யப்பட்டு சுங்க வரி செலுத்தாமல் நாட்டிற்குள் கள்ளத்தனமாக கொண்டு வரப்பட்டுள்ளதாகச் சுங்க வருவாய் கண்காணிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
சரக்கின் உரிமையாளர் சுங்கத்திற்குச் சமர்ப்பித்த அனைத்து ஆவணங்களில் துணிவகைகள் மாத்திரம் கொள்வனவு செய்வதற்காகத் தெரிவித்து ஆடைகளைக் கொள்வனவு செய்துள்ளமை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட ஆடைகளின் பெறுமதி சுமார் 1500 இலட்சம் ரூபாய் என சுங்கப் பிரிவினரால் மதிப்பிடப்பட்டுள்ளதுடன் இவை சந்தைக்கு விடுவிக்கப்பட்டிருந்தால் சுங்கப் பிரிவினருக்கு சுமார் 60 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டிருக்கும் எனவும் சுங்க வருவாய் கண்காணிப்பு பிரிவினர் மேலும் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு ஆடைகளைக் கொள்வனவு செய்த உரிமையாளர் மற்றும் கைப்பற்றப்பட்ட ஆடைகள் தொடர்பாகச் சுங்கப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்த சரக்குகள் அனைத்தையும் பறிமுதல் செய்து தேவையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சுங்கத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- நிஹார் தய்யூப்
தொடர்புடைய செய்திகள்
May 2, 2026, 12:24 pm
அடுத்த வார ரிங்கிட் மதிப்பில் சிறிய மாற்றம் எதிர்ப்பார்க்கப்படுகிறது
April 30, 2026, 12:58 pm
தொழில்நுட்ப மையமாக உருவெடுக்கும் மலேசியா: ஏர்டிரங்க் நிறுவனத்தின் RM27 பில்லியன் ரிங்கிட் திட்டம்
April 30, 2026, 11:23 am
அன்னாசித் துறையில் புதிய புரட்சி: ஜொகூரில் தொழில்நுட்பப் பகிர்வு திட்டங்கள் தீவிரம்
April 29, 2026, 3:02 pm
அமெரிக்கா - ஈரான் மோதல்: அதிரடியாக உயர்ந்த உலகளாவிய கச்சா எண்ணெய் விலை
April 23, 2026, 2:55 pm
இன்று தங்க விலை சரிந்தது
April 21, 2026, 4:08 pm
குழந்தைகள் உணவில் எலி விஷம்: விற்ற பொருள்களைத் திரும்பப் பெறும் தனியார் நிறுவனம்
April 21, 2026, 12:41 pm
