
செய்திகள் மலேசியா
சிறு தானிய உணவு வர்த்தகம் மலேசியாவில் விரிவாக்கம் செய்யப்படும்: மாதம்பட்டி ரங்கராஜ்
கோலாலம்பூர்:
சிறு தானிய உணவு வர்த்தகம் மலேசியாவில் விரிவாக்கம் செய்யப்படும் பிரபல சமையல் வல்லுநர் மாதம்பட்டி ரங்கராஜ் கூறினார்.
இந்தியாவில் மாதம்பட்டி ரங்கராஜ் கேட்டரிங் உணவு என்றால் அதற்கு தனி பெயர் உள்ளது.
சிறு தானியங்களை கொண்டு உணவு தயார் செய்வதுடன் அதை பரிமாறும் முறையிலும் தனி முத்திரை பதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மலேசியாவில் முதல்முறையாக மஇகா தலைவர் டான்ஶ்ரீ விக்னேஸ்வரனின் புதல்வி திருமண விருந்தினர்களுக்கு உணவு வழங்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
மலேசியாவில் முதல் வாய்ப்பு என்பதால் அதை முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்; விருந்தினருக்கு சுவையுடன் தரமான வாழை இலை உணவு வழங்க வேண்டும் என்ற இலக்குடன் இந்த பயணம் தொடங்கியது.
தமிழ்நாட்டில் 60 பேருடன் குறிப்பாக எனது தந்தையும் என்னுடன் வந்தார்.
நினைத்ததை போன்று திருமண விருந்தினர் அனைவருக்கும் தரமான விருந்து உபசரிப்பு வழங்கப்பட்டது.
குறிப்பாக இந்த வாய்ப்பை வழங்கிய டான்ஶ்ரீ விக்னேஸ்வரனும் அவரின் குடும்பத்தாரின் பாராட்டுகளை பெற்றேன்.
இவ்வேளையில் டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் உட்பட எனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று மாதம்பட்டி ரங்கராஜ் கூறினார்.
டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் கொடுத்த வாய்ப்பை தொடர்ந்து மலேசியாவில் இருந்து மக்கள் என்னை அழைத்து உணவு குறித்து விளக்கம் கேட்கிறார்கள்.
மலேசிய மக்களின் இந்த ஆதரவின் அடிப்படையின் சிறு தானிய உணவு வர்த்தகம் மலேசியாவில் விரிவாக்கம் செய்யப்படும்.
இதற்கு டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் வீட்டு திருமணம் ஒரு அடித்தளமாக அமைந்துள்ளது என்று மாதம்பட்டி ரங்கராஜ் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 21, 2025, 9:05 pm
நாட்டிற்கு தலைமையேற்கக் கூடிய ஆளுமைமிக்க தலைவர்களை உருவாக்க வேண்டும்: துன் மகாதீர்
July 21, 2025, 4:34 pm
குடிநுழைவு துறை நாட்டின் அடையாளமாகத் திகழ்கிறது: சைஃபுடின் நசுத்தியோன்
July 21, 2025, 3:58 pm
நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் ரஃபிசி ரம்லி கலந்து கொள்ளவில்லை
July 21, 2025, 3:46 pm
சன்கோன் ஊழியர் மீது ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணை
July 21, 2025, 3:21 pm