நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

Batik Air இன் தலைமைச் செயல்முறை அதிகாரியாக மீண்டும் பொறுப்பில் அமர்ந்தார் சந்திரன் ராமமூர்த்தி

கோலாலம்பூர்:

பாதிக் ஏர் (Batik Air) தனது தலைமை நிர்வாக அதிகாரியாகச் (CEO) சந்திரன் ராமமுர்த்தியை மீண்டும் நியமித்துள்ளது அந்த விமான  நிறுவனம். இது பிப்ரவரி 1 முதல் அமலுக்கு வருவதாகவும் அறிவித்துள்ளது.

முஷாபிஸ் முஸ்தபா பக்ரிக்கு பதிலாகச் சந்திரன் பாதிக் ஏர் நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரியாக மீண்டும் தலைமை பொறுப்புக்குத் திரும்பியுள்ளார் என அந்த விமான நிறுவனம் ஓர் அறிக்கை வாயிலாகத் தெரிவித்துள்ளது.

இதனிடையே லயன் ஏர் குழுமத்தின் பாதுகாப்பு இயக்குநராக முஷாபிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

2013 இல் மலிண்டோ ஏர் என அழைப்பட்டப்பட்ட இந்த விமான நிறுவனம் தொடங்கப்பட்டதிலிருந்து ஆகஸ்ட் 2019 வரை சந்திரன் இந்நிறுவனத்தின் தலைமைச் செயல்முறை அதிகாரியாக இருந்துள்ளார். இந்நிறுவனத்தின் முதல் CEO இவர்தான். தற்போது அந்த விமான நிறுவனம் பாதிக் ஏர் என அழைக்கப்படுகின்றது.

பின்னர் அவர் லயன் ஏர் குழுமத்தில் திட்டமிடல் இயக்குநராகப் பதவி உயர்வு பெற்றார். சந்திரனின் தலைமையின் கீழ் பாதிக் ஏர் திட்டமிடல்களைச் செயல்படுத்துவதில் விரைவான முன்னேற்றத்தை அடைந்துள்ளது. அநே நேரத்தில் வலுவான விரிவாக்கம், மேம்பாட்டுச் செயல் திட்டங்கள் நோக்கி நகர்ந்தது.

இதன் காரணமாக நீண்ட கால விரிவாக்கம், தொழில் பங்குதாரர்கள், வாடிக்கையாளர்களுக்கு நிலையான பதிப்பை உருவாக்குவதற்கான உறுதியான அடித்தளத்தை உருவாக்கியுள்ளது என்பதும் அந்த விமான நிலையில் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாதிக் ஏர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக நான்கரை ஆண்டுகள் பதவியிலிருந்தபோது முஷாபிஸின் மதிப்பிற்குரிய தலைமைத்துவத்திற்கு அந்நிறுவனம் நன்றியினைத் தெரிவித்துக் கொண்டது.

- தயாளன் சண்முகம்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset