நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

நாடாளுமன்றத்தில் இருந்து திமுக வெளிநடப்பு

புது டெல்லி:

தமிழகம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் குறித்து விவாதிக்க மக்களவையின் கடைசி நாளில் அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக வெளிநடப்பு செய்தது. மாநிலங்களவையிலும் திமுக உறுப்பினர்கள்  வெளிநடப்பு செய்தனர்.

நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் நடைபெற்ற ராமர் கோயில் குறித்த சிறப்பு விவாதத்திலும் திமுக பங்கேற்கவில்லை.

இந்த விவாதம் தொடங்கும் முன் திமுக உறுப்பினர்கள், தமிழக நிவாரண நிதி, மீனவர் பிரச்னைகளை குறிப்பிட்டு கோஷமிட்டனர்.  

அப்போது பேசிய டி.ஆர். பாலு, தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்து செல்லும் விவகாரம் குறித்து பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம் அனுப்பியுள்ளார். ஆனால் பிரதமர் இதுவரை சாதகமாக பதிலளிக்கவில்லை என்றார்.

அப்போது மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா,  முக்கியமான தலைப்பில் விவாதம் நடைபெற உள்ளதால் அனுமதியில்லை என்றார்.

இதைக் கண்டித்து திமுக உறுப்பினர்கள் கோஷமிட்டு மக்களவையிலிருந்து வெளியேறினர்.
மாநிலங்களவையிலும் இதேபோல் தமிழக பிரச்சனைகளை விவாதிக்க அனுமதி அளிக்காததால் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset