செய்திகள் வணிகம்
இலங்கையில் இன்று UPI பணப் பரிமாற்ற முறை அறிமுகம்
கொழும்பு:
(Unified Payment Interface) (UPI) எனும் மின்னிலக்க கொடுப்பனவு முறைமையை இலங்கையிலும் அறிமுகம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மொரிஷியஸிலும், இலங்கையிலும் இந்த பணப் பரிமாற்ற முறை அறிமுகம் செய்யும் நிகழ்வு இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி வீடியோ காணொலி ஊடாக பங்கேற்புடன் நடைபெற்றது.
இதில் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க, மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜுக்நவுத் ஆகியோரும் பங்கேற்றனர்.
அதனூடாக பணப் புழக்கமில்லாத பொருளாதார கட்டியெழுப்புவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டில் வரி செலுத்தாமல் இருப்பதற்கு காணப்படும் இடைவெளிகளை நிவர்த்தி செய்வதற்கு இவ்வாறான முறைமைகள் உதவியாக அமைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த UPI முறைமையினூடாக பொது மக்களுக்கு தமது ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகளை மெய்நிகர் (virtual) டெபிட் அட்டையாக பயன்படுத்தக்கூடியதாக இருக்கும்.
பொது மக்களுக்கு இம்முறையைப் பயன்படுத்துவதனூடாக கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வதற்காக பணத்தை அல்லது அட்டைகளை பயன்படுத்த வேண்டியிருக்காது. தமது விவேக கையடக்க தொலைபேசியை பற்றட்டையாக பயன்படுத்தி, பணத்தை அனுப்பவும், பெற்றுக் கொள்ளவும் முடியும்.
ஒரு ஸ்மார்ட் தொலைபேசி app இல் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகளை இணைக்கும் வசதியை பாவனையாளருக்கு UPI வழங்கும். கணக்கு இலக்கங்களை பகிர்ந்து கொள்வதற்கான தேவையின்றி, பணப் பரிமாற்றத்தை மேற்கொள்ளவும் வசதியளிக்கும்.
இலங்கைக்கும் மொரிஷியசுக்கும் விஜயம் செய்யும் இந்தியர்களுக்கு UPI கொடுப்பனவு முறையை பயன்படுத்தும் வசதி இதனூடாக ஏற்படுத்தப்படும்.
வருமானவரித் திணைக்களத்தைச் சேர்ந்தவர்கள் குறிப்பிடுகையில், இந்த முறையினூடாக, நபர் ஒருவர் பணத்தை பெற்றுக் கொள்கையில் அல்லது பல மூலங்களிலிருந்து பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு வருமானத்தைப் பெறுகையில் வரி அறவிடுவதற்கு உதவியாக அமைந்திருக்கும் எனத் தெரிவித்துள்ளனர்.
- நிஹார் தய்யூப்
தொடர்புடைய செய்திகள்
April 21, 2026, 4:08 pm
குழந்தைகள் உணவில் எலி விஷம்: விற்ற பொருள்களைத் திரும்பப் பெறும் தனியார் நிறுவனம்
April 21, 2026, 12:41 pm
அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தை: முக்கிய உலக நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட் ஏற்றம்
April 15, 2026, 11:49 am
அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை: பலம் பெறும் மலேசிய ரிங்கிட்
April 15, 2026, 11:10 am
தாய்லாந்தின் சொங்க்ரான் திருவிழா: 3000 கோடி பாட் வருமானம் ஈட்டி மெகா சாதனை
April 13, 2026, 4:47 pm
அமெரிக்கா - ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி எதிரொலி: இந்திய பங்குச் சந்தை கடும் வீழ்ச்சி
April 9, 2026, 5:23 pm
மெய்நிகர் சொத்துக்களைப் பயன்படுத்தி பணமோசடி செய்யும் அபாயம் அதிகரிக்கிறது
April 9, 2026, 10:35 am
