நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

கொழும்பிலிருந்து கொள்கலன் கப்பலில் இரகசியமாக  மலேசியா சென்ற தம்பதி

கொழும்பு:

கொழும்பு துறைமுகத்திலிருந்து கொள்கலன் கப்பலில் மலேசியா சென்ற  தம்பதி குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறித்த தம்பதி ஹோர்ஸ் யுக்ரெய்ன் என்ற கப்பலில் இரகசியமாக மறைந்து மலேசியாவிற்கு சென்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

39 வயதான ஆண் ஒருவரும் 27 வயதான பெண் ஒருவருமே இவ்வாறு பயணம் செய்துள்ளனர்.

பத்து நாட்களுக்கு போதுமான உணவு மற்றும் நீர் என்பனவற்றை எடுத்துக் கொண்டு இந்த தம்பதியினர் கப்பலில் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்தியாவின் கொல்கத்தா துறைமுகத்திலிருந்து இந்த கப்பல் இலங்கைக்கு வந்ததாக கூறப்படுகின்றது. 

குறித்த சம்பவம் தொடர்பில் இலங்கை துறைமுக அதிகாரசபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset