நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

குடியிருப்பாளர்களின் அத்துமீறிய வாகன நிறுத்தத்தினால் தீயணைப்பு வாகனங்கள் முன்னேற முடியவில்லை

 

கோலாலம்பூர்:

செராஸில் தீ விபத்து நடந்த போது அப்பகுதி குடியிருப்பாளர்களின் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்பட்டிருந்ததால் தீயணைப்பு முன்னேறிச் செல்ல முடியாவில்லை.

இதனால் தீயை அணைப்பதில் தீயணைப்பு படையினர் பல சிரமங்களை எதிர்நோக்கினர்.

செராஸ் ஶ்ரீ சபா அடுக்குமாடி குடியிரிப்பின் 17ஆவது மாடியில் தீ விபத்து நிகழ்ந்தது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து தீயை அணைப்பதற்காக தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அப்போது தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அருகே செல்வதில் கடும் சிக்கல் ஏற்பட்டது.

காரணம் அப்பகுதி குடியிருப்பாளர்கள் வாகங்னகளை மனம்போன போக்கில் கண்மூடித் தனமாக நிறுத்தியிருந்தனர்.

இதனால் டிபிகேஎல் வாகன இழுவை வாகனகங்கள் அங்கு கொண்டு வரப்பட்டு கார்கள் அப்புறப்படுத்தப்பட்டதன்பின்தான் தீயணைப்பு வாகனங்கள் முன்னேறிச் செல்ல முடிந்தது..

மிகப்பெரும் போராட்டத்திற்கு பிறகுதான் தீ அணைக்கப்பட்டது என்று தீயணைப்பு அதிகாரி தெரிவித்தார். 

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset