நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நடப்பாண்டில் 27.3 மில்லியன் வெளிநாட்டு சுற்றுப்பயணிகள் மலேசியாவுக்கு வருவர்: சுற்றுலாத்துறை நம்பிக்கை 

கோலாலம்பூர்:

நடப்பாண்டில் 27.3 மில்லியன் வெளிநாட்டு சுற்றுப்பயணிகளை கவரும் இலக்கை அடைய முடியும் என மலேசிய சுற்றுலாத்துறை நம்பிக்கை கொண்டுள்ளது. 

சுற்றுலாவை ஊக்குவிக்கும் பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் இந்த இலக்கை அடையமுடியும் என டூரிசம் மலேசியாவின் தலைமை இயக்குனர் அம்மார் அப்துல் கஃபார் கூறினார். 

அரசாங்கத்தின் வாடகை விமானத் திட்டத்திற்கான பெரிய அளவிலான மான்ய ஊக்குவிப்பு, விசா விலக்களிப்பு, சுற்றுலாவை அறிமுகப்படுத்தும் திட்டங்களும் இவற்றில் அடங்கும் என அவர் கூறினார். 

Malaysia lays out recovery plans as 2017 tourist arrivals fall short of  targets | TTG Asia

200,000 Chinese tourists visit Malaysia during Labor Day break - News

கடந்த 2023 ஆம் ஆண்டு 20 மில்லியன் வெளிநாட்டு சுற்றுப்பயணிகள் மலேசியாவுக்கு வருகை புரிந்தனர். 

எதிர்பார்க்கப்பட்ட 19.3 மில்லியன் சுற்றுப்பயணிகளை விட இது அதிகமாகும். மலேசியாவுக்கான கூடுதல் வாடகை விமானங்கள் சேவையை நாங்கள் ஊக்குவித்து வருகிறோம். சுற்றுலா இலக்கை அடைவதற்காக புதிய மார்க்கங்களுக்கான விமானச் சேவையை அதிகரிப்பதன் மூலம் இந்த இலக்கை அடைய முடியும் என அம்மார் அப்துல் கஃப்பார் கூறினார்.  

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset