நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பாகிஸ்தானின் 40க்கும் அதிகமான இடங்களில் மீண்டும் வாக்களிப்பு:  தேர்தல் ஆணையம்  உத்தரவு

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானின் தேர்தல் ஆணையம் 40க்கும் அதிகமான வாக்கு நிலையங்களில் மீண்டும் வாக்களிப்பு நடைபெறவேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது.

வாக்கு மோசடி நடந்ததாகக் குற்றச்சாட்டுகள் பதிவானதால் ஆணையம் அந்த முடிவை எடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

மறு வாக்களிப்பு வரும் வியாழக்கிழமை (15 பிப்ரவரி) நடைபெறும் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.

பொதுத்தேர்தல் முடிவுகளில் எந்த ஒரு தரப்புக்கும் பெரும்பான்மை இல்லாததால் நாட்டில் நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது.

போட்டித் தரப்புகளான திரு. நவாஸ் ஷரீஃபின் (Nawaz Sharif) பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியும் திரு. இம்ரான் கானின் (Imran Khan) தரீக்கே இன்ஸாஃப் கட்சியும் அடுத்த அரசாங்கத்தை அமைக்க விரும்புகின்றன.

முன்னைய பிரதமர் இம்ரான் கானின் ஆதரவு கொண்ட சுயேச்சை வேட்பாளர்கள் ஆக அதிக இடங்களைக் கைப்பற்றியிருக்கின்றனர்.

கட்சி என்று பார்த்தால், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி ஆக அதிக இடங்களை வென்றிருக்கிறது.

இந்நிலையில், தேர்தல் முடிவுகளில் ஏற்பட்டிருக்கும் தாமதத்தை எதிர்த்துப் பாகிஸ்தானின் கராச்சி, லாகூர் நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset