நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இலங்கைக்கு பயம் காட்டிய ஆப்கன்: உலக சாதனை படைத்த நபி-ஓமர்சாய் ஜோடி

கொழும்பு: 

ஆப்கானிஸ்தான் அணி தற்பொழுது இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இந்தத் தொடரில் காயம் குணமடையாத காரணத்தினால் ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் ரஷித் கான் இடம் பெறவில்லை.

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி இன்று நடைபெற, போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
 
இலங்கை அணியின் துவக்க ஜோடி 182 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. அவிஷ்கா பெர்னாடோ 88 பந்துகளில் 88 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து குசால் மெண்டிஸ் 16, சதிர சமர விக்ரமா 44, சரித் அசலங்கா 7* ரன்கள் எடுத்தார்கள்.

இன்னொரு முனையில் நிலைத்து நின்று விளையாடிய துவக்க ஆட்டக்காரர் பதும் நிசாங்கா 139 பந்துகளில் 20 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் ஆட்டம் இழக்காமல் 210 ரன்கள் குவித்தார். இலங்கைக்கு அதிகபட்ச ரன் அடித்திருந்த சனத் ஜெயசூர்யாவின் சாதனையை 24 ஆண்டுகள் கழித்து முறியடித்தார்.

50 ஓவர்கள் விளையாடிய இலங்கை அணி மூன்று விக்கெட் இழப்புக்கு 381 ரன்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் பரீத் அகமது இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.

பெரிய இலக்கை நோக்கி விளையாடிய ஆப்கானிஸ்தான் அணிக்கு ஆரம்பத்திலேயே பிரமோத் மதுஷன் 3 மற்றும் சமீரா 2 விக்கெட் என 55 ரன்களுக்கு 5 விக்கெட் கைப்பற்றி பெரிய நெருக்கடியை கொடுத்தார்கள்.

இதற்கு அடுத்து முன்னாள் அனுபவ வீரர் முகமது நபி மற்றும் இளம் ஆல் ரவுண்டர் அசமத்துல்லா ஓமர்சாய் இணைந்து ஆரம்பத்தில் பொறுமையாக விளையாடும் அரை சதம் அடித்து. அதற்கு அடுத்து அதிரடியாக விளையாட ஆரம்பித்தார்கள்.

தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஜோடியில் இருவருமே சதம் அடித்து அசத்தினார்கள். ஐந்தாவது விக்கெட்டுக்கு மொத்தமாக 242 ரன்கள் சேர்த்து உலக சாதனை படைத்த இந்த ஜோடியில் முகமது நபி 130 பந்துகளில் 15 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் உடன் 136 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஓமர் சாய் ஆட்டம் இழக்காமல் 115 பந்துகளில் 13 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் உடன் 149 ரன்கள் எடுத்து களத்தில் நின்றார். 50 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 339 ரன்கள் எடுத்தது.

- ருஷ்டி

தொடர்புடைய செய்திகள்

+ - reset