நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியா வரும் துருக்கி சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை 10.8 விழுக்காடு அதிகரிப்பு

சிப்பாங் :

கடந்தாண்டு ஜனவரி முதல் நவம்பர் வரையிலான காலப் பகுதியில் மலேசியாவிற்கு வரும்  துருக்கிய சுற்றுலாப் பயணிகளின்  10.8 விழுக்காடு அதிகரித்துள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் நாட்டிற்கு வருகை புரிந்த துருக்கி சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை 14,096 பேராக இருந்த நிலையில் கடந்தாண்டு 15,623 பேராகப் பதிவானது.

மலேசியாவை வெளிநாட்டு  பயணிகளுக்கான  சுற்றுலா இடமாக பிரபலப்படுத்தும் பிரச்சாரம் வெற்றியடைந்துள்ளதை  இந்த எண்ணிக்கை  அதிகரிப்பு பிரதிபலிக்கிறது என்று சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ ரோஸ்லான் அப்துல் ரஹ்மான் கூறினார்.

இவ்வாண்டில் மலேசியாவை ஒரு முக்கிய சுற்றுலாத் தலமாக மேம்படுத்துவதற்காக  பல்வேறு பிரச்சாரங்களை மேற்கொள்வதன் மூலம் கடந்த 2023-ஆம் ஆண்டை  சுற்றுப்பயணிகள்  எண்ணிக்கையை அதிகப்படுத்துவோம் என்று நம்புகிறோம் என அவர் குறிப்பிட்டார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset