நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நேர்மறையான வரவேற்பு கிடைத்தாலும் உடனடியாகத் தேசியக் கூட்டணியில் இணைய இயலாது: புனிதன்

பெட்டாலிங் ஜெயா:

மலேசிய இந்திய மக்கள் கட்சி (எம்ஐபிபி) தேசியக் கூட்டணியில் இணைவதற்கான விண்ணப்பத்தின் நிலை குறித்து முடிவெடுக்க  குறைந்தது இன்னும் இரண்டு மாதங்கள் காத்திருக்க வேண்டும் என்று அதன் தலைவர் பி.புனிதன் தெரிவித்துள்ளார்.

கடந்தாண்டு டிசம்பர் மாதம் விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த பின் நேர்மறையான வரவேற்புகள் கிடைக்கும் என்று தாம் எதிர்ப்பார்த்ததாகவும் அவர் கூறினார்.

முதல் சந்திப்பு மிகவும் சாதகமாக இருந்த நிலையில் அடுத்த மாதம் தேசியக் கூட்டணி தலைவர்களுடனான இரண்டாவது சந்திப்புக்காகக் காத்திருப்பதாகவும் அவர் கூறினார்.

கடந்த ஆண்டு டிசம்பர் 9- ஆம் தேதி, எம்ஐபிபி கட்சி தேசியக் கூட்டணியில் இணைய விண்ணப்பம் செய்தது.

மஇகாவைத் தவிர, இந்தியர்களின் குரலைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வேறு எந்தக் கட்சியும் இல்லை. எனவே மஇகா இனி பொருத்தமற்றதாகக் கருதப்பட்ட பிறகு அந்த முயற்சியின் உந்து சக்தியாக நாங்கள் இருக்க விரும்புகிறோம் என்று அவர் கூறினார்.

முன்னதாக, சில அரசியல் பார்வையாளர்கள் புதிய இந்திய அடிப்படையிலான கட்சியை நிறுவுவது சமூகத்தைப் பாதிக்கலாம் என்றும் அது வாக்குகளைப் பிளவுபடுத்தும் என்றும் கருதினர்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset