நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தக்கியூடினின் கருப்பு வெள்ளி கருத்து நாட்டிற்கு தீங்கானது: சிஸ்டர்ஸ் இன் இஸ்லாம்

கோலாலம்பூர்:

தக்கியூடினின் கருப்பு வெள்ளி கருத்து நாட்டிற்கு தீங்கானது என்று சிஸ்டர்ஸ் இன் இஸ்லாம் என்ற அமைப்பு கூறியது.

கிளந்தான் சிரியா குற்றவியல் நீதிமன்ற (I) சட்டம் 2019 இல் உள்ள 16 விதிகள் அரசியலமைப்புக்கு முரணானவை என்ற அடிப்படையில் அது செல்லாது என்று கூட்டரசு நீதிமன்றத்தின் தீர்ப்பளித்தது.

இந்த முடிவிற்கு பல தரப்பிடம் இருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.

இந்நிலையில் பாஸ் கட்சியின் தலைமை செயலாளர் தக்கியூடின் ஹசான், நீதிமன்றத்தின் ஷ்ரியாவுக்கு எதிரான தீர்ப்பு நாள் ஒரு கருப்பு தினம் என்றும் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் மக்கள் வருத்தமடைந்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.

இதுபோன்ற அறிக்கைகள் அரசியல் ஆதாயத்திற்காக மதச் சுரண்டல் பற்றிய கதையைப் பரப்புகிறது.

கூட்டரசு நீதிமன்றத்தை அதன் தீர்ப்பிற்காக அமைப்பு பாராட்டுகிறது.

இது மாநில சட்டமன்றங்கள் கூட்டாட்சி அரசியலமைப்பை கடைபிடிக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது என்று அந்த அமைப்பு கூறியது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset