நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

கால்பந்துப்  போட்டியில் அறிமுகமாகும் புதிய விதிமுறை 

லண்டன்:

54 ஆண்டுகளுக்கு பின் கால்பந்துப் போட்டிகளில் புதிய அட்டை ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அனைத்துக கால்பந்து சம்மேளனம் அறிவித்துள்ளது.

அதன்படி அனைத்துலகக் போட்டிகளில் நீல நிற அட்டை அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கால்பந்துப் போட்டியை மேம்படுத்துவதற்காகவே இவ்வாறு நீல நிற அட்டை அறிமுகப்படுத்தப் படவுள்ளதாக கூறப்படுகிறது.

1970 ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டியில் மஞ்சள், சிவப்பு அட்டைகள் அறிமுகப்படுத்தப் பட்டதன் பின்னர் போட்டியில் பயன்படுத்தப்படும் முதல் புதிய அட்டை இதுவாகும் என கூறப்படுகிறது.

போட்டிகளில் வீரர்கள் தவறு செய்தாலோ, நடுவருடன் கருத்து வேறுபாட்டை மேற்கொண்டாலோ நீல அட்டை காட்டப்படும்

இதன்போது 10 நிமிடங்களுக்கு குறித்த வீரர்கள் அரங்கில் இருந்து நீக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இரண்டு முறை நீல அட்டை காட்டப்பட்டால் அந்த வீரர் மைதானத்தில் இருந்து வெளியேற்றப்படுவார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset