நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

பினாங்கு எஃப்சி: போட்டியின் போது முன்னாள் கோல் காவலர் ஃபிரோஸ் முஹம்மத் சரிந்து விழுந்து மரணம்

ஜார்ஜ் டவுன்:

பினாங்கு எஃப்சி கால்பந்து அணியின் முன்னாள் கோல் காவலர் ஃபிரோஸ் முஹம்மத் போட்டியின் போது சரிந்து விழுந்து திடிர் மரணமடைந்துள்ளார்.

நேற்று இரவு மஞ்சோங் நகராட்சி மன்றத்தின் கால்பந்து அரங்கில்டாக்டர் சாம்ப்ரி அப்துல் காதிர் கிண்ணத்தின் நான்கு முனை போட்டியின் போது 53 வயதான ஃபிரோஸ் முகமது சரிந்து விழுந்து இறந்தார்.

பினாங்கு எஃப்சி அணி அதன் அதிகாரப்பூர்வ சமூக ஊடகங்களில் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

இறந்த பபினாங்கு எஃப்சி கால்பந்து அணியின் முன்னாள் கோல் காவலர் ஃபிரோஸ் முஹம்மத் குடும்பத்திற்கு பினாங்கு எஃப்சியின் இயக்குநர்கள் குழு மற்றும் அனைத்து ஊழியர்களும் தங்கள் இரங்கலைத் தெரிவித்துக் கொண்டனர்.

முன்னதாக, கெடாவின் புகழ்பெற்ற அணிக்கு எதிராக விளையாடும் போது ஃபிரோஸ் சரிந்து விழுவதை காட்டும் பல காணொலிகள் சமூக ஊடகங்களில் வைரலாகின.

1990 களில் பினாங்கிலும் நாட்டிலும் சிறந்த கோல் காவலர்களில் ஒருவராக ஃபிரோஸ் அறியப்பட்டார்.

இதுவரை, இந்தச் சம்பவம் குறித்து அதிகாரிகள் எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையையும் வெளியிடவில்லை.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset