நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பாகிஸ்தானில் தேர்தல் வன்முறை: 2 பேர் மரணம்: காவல்துறையினர் உட்பட 11 பேர் காயம்

லாகூர்:

பாகிஸ்தானில் கடந்த 8-ஆம் தேதி பொது தேர்தல் நடந்தது.

நாடாளுமன்றம் மற்றும் 4 மாநிலங்களுக்கான நடந்த இந்த தேர்தல் நிறைவடைந்ததும், வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. எனினும், அதிகாரப்பூர்வ முடிவுகள் இன்னும் முழுமையாக அறிவிக்கப்படவில்லை.

இந்தச் சூழலில், பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சியை சேர்ந்த, முந்தின அரசுகளில் அமைச்சராகப் பதவி வகித்தவரான அமீர் முகாம் என்பவர் என்.ஏ. 11 தொகுதியில் வெற்றி பெற்றார் என பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்தத் தேர்தல் முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும், முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பி.டி.ஐ.) கட்சியை சேர்ந்த தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களை கட்டுப்படுத்துவதற்காகக் காவல்துறையினர் அங்குக் குவிக்கப்பட்டனர். இதனால், காவல்துறையினருக்கும், தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

அரசு வாகனம் ஒன்று தீ வைத்து கொளுத்தப்பட்டது. இதனால், கலவரக்காரர்களை விரட்டுவதற்காக கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டது.

இந்த மோதலில் பரீனின் ஆதரவாளர்கள் 2 பேர் உயிரிழந்தனர். 5 பேர் காயமடைந்தனர்.

இந்தச் சம்பவத்தில், 6 காவல்துறை அதிகாரிகளுக்குக் காயம் ஏற்பட்டுள்ளது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset