நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தலைநகரில் அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதிகளாக 50 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன: கோலாலம்பூர் காவல்துறை தலைவர் அலாவுதீன்

கோலாலம்பூர்:

தலைநகரில் அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதிகளாக 50 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அதே வேளையில் 11 இடங்கள் அதிகம் சாலை விபத்தகள் நடக்கும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ளது என்று கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ அலாவுதீன் அப்துல் மஜித் கூறினார்.

சீனப் புத்தாண்டை முன்னிட்டு தலைநகரின் ஓப்ஸ் செலாமாட் சாலை பாதுகாப்பு பணிகளை போலீசார் தொடங்கியுள்ளனர்.

அதனை கண்காணிக்க 140 போலீஸ் அதிகாரிகளும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

இதில் பூலாத்தான் பகாங்கிலிருந்து ஜாலான் துன் ரசாக், ஜாலான் செரஸ், ஜாலான் இகான் ஆயு, ஜாலான் கம்பங் கெரிஞ்சி/பாங்சார் சவூத், ஜாலான் சுல்தான் இஸ்மாயில்/ஜாலான் புக்கிட் பிந்தாங் ஆகியவை அதிக சாலை நெரிசல் ஏற்படும் பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

அதே வேளையில் ஜாலான் லொக் யூ, ஜாலான் ஈப்போ, ஜாலான் செராஸ், ஜாலான் கூச்சிங் ஆகியவை அதிக சாலை விபத்து நடக்கும் இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

ஆகவே பொது மக்கள் திட்டமிட்டும் பாதுகாப்புடனும் பயணங்களை மேற்கொள்ள வேண்டும்.

குறிப்பாக நெடுஞ்சாலை நிறுவனங்கள் வழங்கும் பயண அட்டவணையை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்று  அவர் அறிவுறுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset