நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

உத்தரகண்ட் பேரவையில் பொது சிவில் சட்டம் நிறைவேறியது

டேராடூன்: 

உத்தரகண்ட் பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா  நிறைவேற்றப்பட்டது. இந்தியாவில் முதல் மாநிலமாக உத்தரகண்டில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

எனினும், பழங்குடி சமூகத்தினருக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், லிவ்இன் டூகெதர் உறவைப் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் திருமணம், விவாகரத்து, தத்தெடுத்தல், வாரிசுரிமை ஆகியவற்றில் ஒவ்வொரு மதத்திலும் வெவ்வேறு வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

அதற்குப் பதிலாக அனைத்து மதத்தினரும் ஒரே சட்டத்தைப் பின்பற்ற வழியமைக்கும் பொது சிவில் சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்த பாஜக அரசு முயற்சித்து வருகிறது.

இந்நிலையில், பொது சிவில் சட்ட மசோதா உத்தரகண்ட் சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தொடரில் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி தாக்கல் செய்தார்.

பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset