நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

CEO கொலை வழக்கு : மனைவி உட்பட இரண்டு மகன்கள் விடுதலை

கோலாலம்பூர்:

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு கிராடில் ஃபண்ட் தலைமை நிர்வாக அதிகாரி நஸ்ரின் ஹாசன் கொலை வழக்கிலிருந்து மனைவி சமீரா முசஃபர் உட்பட அவரது இரண்டு மகன்களை விடுவித்த தீர்ப்பை மேல்முறையீட்டு நீதிமன்றம் நிலைநிறுத்தியது.

இந்த வழக்கைத் தொடர மேல்முறையீடு அனுமதி தர வேண்டுமென அரசு தரப்பு முன்வைத்த பரிந்துரையை டத்தோ வசீர் ஆலம் மைதின் மீரா தலைமையிலான மூவர் அடங்கிய நீதிபதிகள் குழு ஏகமானதாக நிராகரித்தது.

கொலை செய்யப்பட்டவருக்கும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட இளைஞர்களுக்கும் நல்ல உறவு இருக்கும் என்று எதிர் சான்றுகள் உள்ளன. வழக்கில் கொண்டு வரப்பட்ட சாட்சிகள் சூழ்நிலைகளின் அடிப்படையில் அமைகின்றன. குற்றத்தை நிரூபிப்பதில் அரசு தரப்புத் தவறிவிட்டது என நீதியரசர் டத்தோ வசீர் கூறினார்.

தீர்ப்பை வாசித்த வசீர், குற்றம் சாட்டப்பட்டவர்களைக் குற்றவாளி என்று நிரூபிக்க வழக்கறிஞர்கள் "கொலை செய்யப்பட்டவரைக் கடைசியாகப் பார்த்தவர்" என்ற கூற்று நம்ப முடியாதது என்றார்.

"இந்தக் கொலைக்கான காரணத்தை வழக்கு விசாரணையில் காண முடியவில்லை". பணம் நோக்கம், விவாகரத்து முயற்சிகள், மோசமான உறவு போன்றவற்றை முன்வைத்து வழக்கறிஞர்கள் கொண்டுவந்த ஆதாரங்கள் தெளிவற்றவை". என்றார் அவர்.

கொலைக்கான காரணத்தை நம்புவதற்கு அது தெளிவான ஆதாரங்களுடன் நன்கு நிரூபிக்கப்பட வேண்டும். மாறாகத் தெளிவற்றதாக இருக்கக்கூடாது என்பதையும் சுட்டிக் காட்டினார். அதன் அடிப்படையில் அவர்களை விடுவித்த தீர்ப்பை மேல்முறையீட்டு நீதிமன்றம் நிலை நிறுத்துவதாக நீதிபதி டத்தோ வசீர் கூறினார்.

முன்னதாக 13 ஜூன் 2018 அன்று இரவு 11.30 மணிக்கும் 2018 ஜூன் 14 அன்று அதிகாலை 4 மணிக்கும் இடையில் முதியாரா டமன்சாராவில் உள்ள இரு வீட்டில் நஸ்ரின் (வயது 45) என்பவரைக் கொலை செய்ததாகச் சமீரா, இரண்டு இளைஞர்கள் மற்றும் அவர்களின் பணிப்பெண்ணாக இருந்த இந்தோனேசிய நாட்டவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.

- தயாளன் சண்முகம் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset