நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசிய கூட்டுறவு நிறுவனத்தில் உள்ள வாய்ப்புகளை இந்தியர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்: டத்தோ ரமணன்

பெட்டாலிங்ஜெயா:

மலேசிய கூட்டுறவு நிறுவனத்தில் உள்ள வாய்ப்புகளை இந்தியர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துறை துணையமைச்சர் டத்தோ ரமணன் கூறினார்.

நாட்டில் 15 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட கூட்டுறவுக் கழகங்கள் உள்ளன. 

கிட்டத்தட்ட 7 மில்லியனுக்கும் அதிகமான உறுப்பினர்கள் அதில் உள்ளனர்.

நாட்டு மக்கள் தொகையில் 20 விழுக்காடு கூட்டுறவுக் கழகங்களில் உறுப்பினர்களாக உள்ளனர்.

இதன் அடிப்படையில் மலேசிய கூட்டுறவு கழகம் நாடு முழுவதும் உள்ள அனைத்து கூட்டுறவு உறுப்பினர்களுக்கும் பயிற்சியை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அனைத்து கூட்டுறவு உறுப்பினர்களுக்கும் பயிற்சி அளிப்பதில் பங்களிப்பதோடு கூடுதலாக ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.

தொழில்முனைவோர் மேம்பாடு, கூட்டுறவு அமைச்சின் கீழ் பயிற்சி, வணிகம், பொருளாதாரம் ஆகிய அம்சங்களில் கூட்டுறவு நிறுவனங்களுக்கு தகவல்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர் கூறினார்.

இதனிடையே கடந்தாண்டு நடந்த மலேசிய கூட்டுறவு நிறுவனத்தின் பயிற்சிகளில் 17 ஆயிரம் இந்தியர்கள் கலந்துக் கொண்டனர்.

இந்த ஆண்டு அதிகமானோர் இப்பயிற்சிகளில் கலந்துக் கொள்ள வேண்டும்.

குறிப்பாக அதில் உள்ள வாய்ப்புகளை இந்திய சமுதாயம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று டத்தோ ரமணன் வலியுறுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset