நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மித்ராவின் செயல்பாடுகளைக் கண்காணிப்பேன்: புனிதன் பரமசிவம்

கோலாலம்பூர்:

மித்ரா சிறப்புப் பணிக்குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி. பிரபாகரனுக்கு வாழ்த்தினைத் தெரிவித்துக் கொள்வதாக எம்ஐபிபி எனப்படும் மலேசிய இந்திய மக்கள் கட்சியின் தலைவர் புனிதன் பரமசிவம் கூறியுள்ளார்.

அதோடு தமது வழங்கப்பட்டுள்ள பொறுப்பைச் சகோதரர் பிரபாகரன் சிறப்பாக முன்னெடுத்து இந்தியச் சமுதாயத்தின் நலனை எப்போதும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.

இதனிடையே மடானி கொள்கைக்கும், இந்தியச் சமுதாய வளர்ச்சிக்கும் மித்ரா எம்மாதிரியான செயல்திட்டங்களை முன்னெடுக்கின்றது என்பதை எம்ஐபிபி தொடர்ந்து கண்காணிக்கும்.

"கடந்த 2 தவணையாக நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் பிரபாகரன் இந்தியச் சமுதாயத்தின் சிக்கல்களை முழுமையாக அறிந்திருப்பார்.

"கொடுக்கப்பட்ட கடமையையும் அவர் மீது கொண்டிருக்கும் நம்பிக்கையும் நிறைவேற்ற வயது ஒரு தடையல்ல என நான் நினைக்கின்றேன். மித்ரா ஒரு செயல்திறன் மிக்க அதோடு நடுநிலையான அமைப்பாக மாறுவதைப் பார்க்க விரும்புகிறேன்" எனப் புனிதன் தமது அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளார்.

மடானி கொள்கையில் இந்தியர்கள் எந்தவொரு குறிப்பிட்ட வளர்ச்சியையும் கொண்டிருக்கவில்லை. அதனால் இந்தியச் சமுதாயத்திற்காக வழங்கப்பட்டுள்ள 100 மில்லியன் முழுமையுமாக அவர்களின் மேம்பாட்டிற்காகப் பயன்படுத்தப்படும் எனத் தாம் நம்புவதாகப் புனிதன் கூறியுள்ளார்.

நிதியைப் பகிர்ந்து அளிப்பது மட்டும் மித்ராவின் பணியல்ல. மாறாகக் கொடுக்கப்பட்ட நிதி இந்தியச் சமுதாயத்தின் பொருளாதார மேம்பாட்டிற்கு வித்திட்டதா? என்பதை ஆராய வேண்டும்.

கடந்த பொதுத் தேர்தல் வாக்குறுதியில் மித்ராவின் கணக்கறிக்கை தணிக்கை ஆய்வு செய்யப்படுமெனப் பிரதமர் வாக்குறுதி அளித்திருந்தார். அந்த வாக்குறுதியைப் பிரபாகரன் நிறைவேற்றுவார் எனத் தாம் நம்புவதாகவும் இதுவரை மித்ராவை வழிநடத்தியவர்களைக் காட்டிலும், பிரபாகரன் தமது பணியைச் சிறப்பாக முன்னெடுக்க வாழ்த்தினைத் தெரிவித்துக் கொள்வதாகவும் புனிதன் தெரிவித்துள்ளார்.

- தயாளன் சண்முகம் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset