நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எல் நினோ இவ்வாண்டின் பிற்பகுதி வரை தொடரும்: மெட்மலேசியா

கோலாலம்பூர்: 

எல் நினோ என்பது உலகம் முழுவதும் பரவலாக பல்வேறு பகுதிகளிலும் வெப்பநிலையை உயரச் செய்யும் ஒரு வகை காலநிலை நிகழ்வாகும். 

பசிபிக் கடல் பரப்பில் ஏற்படும் வெப்பநிலை அதிகரிப்புதான் 'எல் நினோ' என்று விஞ்ஞானிகள் விளக்கம் தருகின்றனர். 

இந்நிலையில், தற்போது நாட்டில் எல் நினோ இவ்வாண்டின் பிற்பகுதி வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக மெட்மலேசியா தெரிவித்துள்ளது. 

இந்த நிகழ்வு கடந்த ஆண்டு மத்தியில் தொடங்கி 18 மாதங்கள் வரை தொடரலாம் என்று மலேசிய வானிலை ஆய்வு மையமான (மெட்மலேசியா)-வின் இயக்குநர் முஹம்மத் ஹெல்மி அப்துல்லா தெரிவித்துள்ளார். 

ஆண்டின் மத்தியக் காலக்கட்டத்தில் அது பலவீனமடையத் தொடங்கி இயல்பு நிலை ஏற்படாலம் என்றும் அவர் குறிப்பிட்டார். 

காற்றின் வெப்பநிலையைச் சாதாரணமாக ஒப்பிடும்போது நம் நாட்டில், குறிப்பாக தீபகற்பத்தின் வட மாநிலங்கள், பேராக், கெலாந்தன் மற்றும் பகாங்கின் உள்பகுதிகளில் அதிகரிக்கும்.

எல் நினோ விளைவின் உச்சம் வழக்கமாக வடகிழக்கு பருவமழையின் முடிவில் தொடங்கி ஆண்டின் பிற்பகுதி வரை நீடிக்கும் என்று அவர் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset