நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

வெள்ள நிவாரணம்: திமுக - பாஜக இடையே கடும் வாக்குவாதம்

புது டெல்லி:

தமிழக வெள்ள நிவாரணம் விவகாரத்தில் திமுகவுக்கும் பாஜகவுக்கும் நாடாளுமன்றத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த விவகாரத்தை மக்களவையில் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு எதிர்ப்பு தெரிவித்தார்.

மேலும், தமிழகத்தில் ஏற்பட்ட புயல், மழைக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பை முறையாக வழங்கவில்லை; சென்னை வானிலை ஆய்வு மையத்தில் நவீன உபகரணங்கள் இல்லாதது போன்றவற்றால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர் எனக் குறிப்பிட்டு டி.ஆர். பாலு பேசினார்.

அப்போது இணையமைச்சர் எல்.முருகன் குறுக்கிட்டு இது சம்பந்தமில்லாத கேள்வி என்றார்.

இதற்கு டி.ஆர்.பாலு சில வார்த்தைகளைக் கூற, பாஜக தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு வந்தது.

மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, இணையமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால் உள்ளிட்டோர், எல்.முருகன் ஒரு தலித்  அமைச்சர் என்பதால் டி.ஆர். பாலு எப்படி கூறலாம்.

இதனால் சுமார்  31 நிமிஷம் வாக்குவாதம் தொடர்ந்தது. டி.ஆர்.பாலு தான் பேசியவற்றைத் திரும்பப் பெற மறுத்தார். இதையடுத்து, அமைச்சர் எல்.முருகன் குறித்து குறிப்பிடப்பட்ட வார்த்தைகளை மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அவைக்குறிப்பிலிருந்து நீக்கினார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset