நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தது மகிழ்ச்சியளிக்கிறது: இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர்

புது டெல்லி

இந்திய அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ அழைப்பின் பேரில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க உள்ளிட்ட கட்சியின் பிரதிநிதிகள் இன்று இந்தியாவிற்குச் சென்றுள்ளனர்.

இதன் ஓர் அங்கமாக ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசியுள்ளார்.

இருதரப்பு உறவுகள் குறித்தும் அதனை மேலும் வலுப்படுத்துவதால் உருவாகக்கூடிய நன்மைகள் குறித்தும் இந்தச் சந்திப்பின் போது ஆராயப்பட்டதாக ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கையின் பொருளாதார சவால்கள் முன்னோக்கிய பாதை குறித்தும் ஜேவிபி தலைவருடனான பேச்சுவார்த்தைகளின் போது ஆராயப்பட்டதுடன் இந்தியா தனது அயல் நாட்டிற்கு முதலிடம் என்ற கொள்கை காரணமாக இலங்கையின் நண்பனாகவும் நம்பகத்தன்மை மிக்க சகாவாகவும் விளங்கும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

- நிஹார் தய்யூப்

தொடர்புடைய செய்திகள்

+ - reset