நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

11.48 கோடி பான் கார்டுகள் ஆதாருடன் இணைக்கவில்லை

 புது டெல்லி:

இந்தியாவில் 11.48 கோடி பான் கார்டுகள் ஆதாருடன் இணைக்கப்படவில்லை என்று நாடாளுமன்றத்தில்  அரசு தெரிவித்தது.

ஒரு நபரே பல்வேறு பான் கார்டுகளை வாங்கி மோசடியில் ஈடுபடுவதைத் தடுக்கும் நோக்கில் பான் கார்டை ஆதாருடன் இணைப்பதை இந்திய அரசு கட்டாயமாக்கியது.

பான்-ஆதார் இணைப்பு தொடர்பான கேள்விக்கு நிதித் துறை இணையமைச்சர் பங்கஜ் சவுதரி  அளித்த பதிலில், 2023 ஜூன் 30ம் தேதிக்குப் பிறகு பான்}ஆதார் இணைப்பவர்களுக்கு தாமதக் கட்டணம் ரூ.1,000 விதிக்கப்பட்டது.

இதில் கடந்த ஜனவரி வரையில் ரூ.601.97 கோடி தாமதக் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. 11.48 கோடி பான் கார்டுகள் இன்னும் ஆதாருடன் இணைக்கப்படாமல் உள்ளன என்று கூறியுள்ளார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset