நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

சண்டீகர் மேயர் தேர்தலில் ஜனநாயக படுகொலை

புது டெல்லி:

சண்டீகர் மேயர் தேர்தலில் முறைகேடு செய்வது விடியோவில் தெளிவாக பதிவாகி உள்ளது; இது ஜனநாயக படுகொலை என்று உச்சநீதிமன்றம்  தெரிவித்தது.

ஜனவரி 30ம் தேதி நடைபெற்ற சண்டீகர் மாநகராட்சி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் கூட்டணிக்கு 20 கவுன்சிலர்கள் இருந்தும், 16 கவுன்சிலர்களின் வாக்குகளைப் பெற்ற பாஜக வேட்பாளர் மனோஜ் சோன்கர் வெற்றி பெற்றார் என தேர்தல் அதிகாரி அனில் மாசிஹ் அறிவித்தார். 8 வாக்குகள் செல்லாதவை என்றும் அவர் தெரிவித்தார்.

தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக ஆம் ஆத்மி கவுன்சிலர் குல்தீப் சிங், பஞ்சாப்- ஹரியாணா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். தேர்தலுக்கு உடனடியாகத் தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டதைத்தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தில் அவர் மேல் முறையீடு செய்தார்.

இந்த மனுவை திங்கள்கிழமை விசாரித்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி. பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் அமர்வு, மேயர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது பதிவான விடியோ காட்சிகளை முழுமையாகப் பார்வையிட்டது.

பின்னர் நீதிபதிகள் அமர்வு, வாக்குச் சீட்டுகளை தேர்தல் நடத்தும் அதிகாரி சிதைப்பது விடியோவில் தெளிவாக பதிவாகி உள்ளது. இது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும், படுகொலை செய்யும் செயல். தேர்தலில் பதிவான வாக்குகள், விடியோ பதிவு பத்திரப்படுத்தப்பட்டு திங்கள்கிழமை மாலை 5 மணிக்குள் உயர்நீதிமன்றப் பதிவாளரிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

அடுத்த விசாரணை நடைபெறும் பிப். 19ஆம் தேதி தேர்தல் அதிகாரி நேரில் ஆஜராக வேண்டும் உத்தரவிட்டது.

உச்சநீதிமன்ற உத்தரவு பாஜகவுக்கு கன்னத்தில் விழுந்த பலத்த அறை என்று ஆம் ஆத்மி, காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset