நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஸ்பான்கொ விவகாரத்தில் முன்னாள் பிரதமர், நிதியமைச்சர் எம்.ஏ.சி.சி விசாரணைக்கு அழைக்கப்படுவர் 

கோலாலம்பூர்: 

1990ஆம் ஆண்டுகளில் அரசாங்கத்துடன் ஸ்பான்கோ செய்துக்கொண்ட உடன்படிக்கை தொடர்பாக முன்னாள் பிரதமரும், நிதியமைச்சரும் எம்.ஏ.சி.சி விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள் என்று ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டான்ஶ்ரீ அஸாம் பாக்கி கூறினார். 

இந்த விவகாரத்தில் அனைவரும் உடந்தையாக இருந்துள்ளனர். அரசாங்க வாகனத்தில்  வழங்கப்பட்ட நடமுறைகளும் நடவடிக்கைகளும் தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார். 

1998-1999 ஆம் ஆண்டுகளில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் வரலாறுகளும் அதன் நடவடிக்கைகளும் எம்.ஏ.சிசியால் மதிப்பீடு செய்யப்படும் என்று அவர் குறிப்பிட்டார். 

கடந்த 1993ஆம் ஆண்டு முதல் ஸ்பான்கோ நிறுவனம் மலேசியாவில் செயல்பட்டு வந்தது. இருப்பினும், கடந்த 2020ஆம் ஆண்டு ஸ்பான்கோ நிறுவனத்திற்கு எதிராக பெர்ஜாயா நிறுவனம் சம்மன் வழக்கு தொடுத்தது. 

முன்னதாக, ஸ்பான்கோ நிறுவனத்தால் நாட்டிற்குப் பெரும் இழப்பாக உள்ளது என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் சொன்னார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset