நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஒற்றுமை அரசாங்கத்திற்கு வழங்கி வரும் ஆதரவை அம்னோ திரும்ப பெற அழைப்பா? அஷ்ராஃப் வஜ்டி மறுப்பு

கோலாலம்பூர்: 

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்திற்கு அம்னோ ஆதரவு வழங்கி வருகிறது. இந்நிலையில் நடப்பு அரசாங்கத்திற்கு வழங்கி வரும் ஆதரவை மீட்டுக்கொள்ள அம்னோவுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் அம்னோ தலைமை செயலாளர் விளக்கம் அளித்துள்ளார். 

அரசாங்கத்திற்கு வழங்கி வரும் ஆதரவை திரும்ப பெறுவதற்கு சில அம்னோ தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியை டாக்டர் அஷ்ராஃப் வஜ்டி டுசுக்கி திட்டவட்டமாக மறுத்துள்ளார். 

மேலும், பிரதமர் டத்தோஶ்ரீ அன்வாரின் தலைமைத்துவத்தின் மேல் சில அம்னோ தலைவர்கள் அதிருப்தி கொண்டுள்ளனர். குறிப்பாக, நஜிப் ரசாக் அரச மன்னிப்பு விவகாரத்தில் அவர் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர் என்று ஒரு சாரார் குறிப்பிட்டுள்ளனர். 

இதுவரை அம்னோ அரசாங்கத்தில் தான் இடம்பெற்றுள்ளது. யாரும் எந்தவொரு ஆதரவும் திரும்ப பெறுவதற்கான அழைப்புகள் எதுவும் இல்லை என்று அவர் சொன்னார்.

-மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset