நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜொகூர் தேசிய முன்னணி தலைவராக மந்திரி புசார் ஓன் ஹபிஸ் நியமனம்

கோலாலம்பூர்:

ஜொகூர் தேசிய முன்னணி தலைவராக மந்திரி புசார் டத்தோ ஓன் ஹபிஸ் கசாலி நியமனமிக்கப்பட்டுள்ளார்.

தேசிய முன்னணி உச்சமன்றக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பல முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

குறிப்பாக ஜொகூர், திரெங்கானு மாநிலங்கலளுக்கான புதிய தேசிய முன்னணி தலைவர்கள் நியமிக்கப்பட்டனர்.

இதில் ஜொகூர் மாநில மந்திரி புசார் ஓன் ஹபிஸ் கசாலி மாநிலத்தின் புதிய தேசிய முன்னணி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதே போன்று திரெங்கானு தலைவராக ரோஸி மாமாட் நியமிக்கப்பட்டுள்ளார் என்று தேசிய முன்னணி தலைமை செயலாளர் டத்தோஶ்ரீ ஸம்ரி காடிர் கூறினார்.

இதனிடையே மலேசியாவின் 17ஆவது மாமன்னராக பதவியேற்ற சுல்தான் இப்ராஹிமுக்கு தேசிய உச்சமன்றம் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டது.

மாட்சிமை தங்கிய மாமன்னர் ஆட்சியில் மலேசியாவை அதிக செழிப்பு, நல்வாழ்வை நோக்கி கொண்டு செல்லட்டும்.

மேலும் நாட்டின் 16ஆவது மாமன்னராக தனது பதவிக் காலத்தை முடித்த அல்-சுல்தான் அப்துல்லாவுக்கு தேசிய முன்னணி உச்சமன்றம்  நன்றியைத் தெரிவித்துக் கொண்டது என்று அவர் மேலும் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset