நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நஜீப்பின் மன்னிப்பு தொடர்பான நடவடிக்கைகளை தேசிய முன்னணி ஆதரிக்கும்

கோலாலம்பூர்:

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் விவகாரத்தில் மன்னிப்பு வாரியத்தின் முடிவைத் தொடர்ந்து அடுத்து எடுக்கப்பட வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் தேசிய முன்னணி முழுமையாக ஆதரிக்கும்.

இதனை தேசிய முன்னணி தலைமை செயலாளர் டத்தோஸ்ரீ ஸம்ரி அப்துல் காடிர் தெரிவித்தார்.

தேசிய முன்னணியின் உச்சமன்றக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல முக்கிய விவகாரங்கள் குறித்து பேசப்பட்டது.

குறிப்பாக நஜீப்பின் சிறைத் தண்டனை 12 ஆண்டுகளில் இருந்து ஆறு ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது.

210 மில்லியன் ரிங்கிட்டாக இருந்த அபராத தொகை 50 மில்லியன் ரிங்கிட்டாக குறைக்கப்பட்டுள்ளது.

தேசிய முன்னணி உச்சமன்றம் அரசியலமைப்பின் 42ஆவது பிரிவின்படி மன்னிப்பு வாரியத்தின் இந்த முடிவை மதிக்கிறது.

அதே வேளையில் நஜீப் முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும் என்பது தான் அனைவரின் எண்ணமாக உள்ளது.

அதன் அடிப்படையில் அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள சட்டத்தின்படி எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் தேசிய முன்னணி ஆதரிக்கும் என்று டத்தோஸ்ரீ ஸம்ரி கூறினார்.

முன்னதாக நஜீப் 2028ஆம் ஆண்டு சிறையில் இருந்து விடுவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset