நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிறு நடுத்தர வணிகர்களை அங்கீகரிப்பதே மிம்காய்னின் இலக்கு: டத்தோ ஜமருல்கான்

கோலாலம்பூர்:

சிறு நடுத்தர வணிகர்களை அங்கீகரிப்பதே மிம்காய்னின் இலக்கு என்று அதன் தலைவர் டத்தோ ஹாஜி ஜமருல்கான் கூறினார்.

மிம்காய்ன் எனப்படும் மலேசிய இந்திய முஸ்லிம் வர்த்தக தொழிலியல் சம்மேளனம் 4ஆவது ஆண்டாக இந்த விருது விழாவை நடத்துகிறது.

கிட்டத்தட்ட 31 சிறு நடுத்தர வணிகர்களுக்கு இந்த விழாவில் விருது வழங்கப்படுகிறது.

இந்திய முஸ்லிம்களை தவிர்த்து இந்தியர்கள், மற்ற இனத்தவர்களுக்கும் விருது வழங்கப்படுகிறது.

வர்த்தகத்தில் சாதிக்கும் சிறு நடுத்தர வணிகர்களை அங்கீகரிப்பதே இதன் நோக்கமாகும் என்று விருது விழாவில் பேசிய அவர் கூறினார்.

இந்திய முஸ்லிம் சமுதாயம் தற்போது 70க்கும் மேற்ப்பட்ட தொழில் துறைகளில் சாதித்து வருகின்றனர்.

இச் சாதனைகள் தொடர வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை மிம்கோய்ன் தொடர்ந்து மேற்கொள்ளும் என்று டத்தோ ஜமருல்கான் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset