நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நஜீப் அரச மன்னிப்பு விவகாரம்: இன்று கூடுகிறது அம்னோ உச்சமன்றம்

கோலாலம்பூர்:

முன்னாள் அம்னோ தலைவர் நஜீப் துன் ரசாக்கிற்கு அரச மன்னிப்பு இல்லை என்று மன்னிப்பு வாரியம் அதிரடியாக அறிவித்தது.

இதனை தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து ஆலோசிக்க சிறப்பு அம்னோ உச்சமன்றம் இன்று காலை 11 மணிக்கு கூடவுள்ளது.

எஸ்ஆர்சி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் அரச மன்னிப்பு கோரியிருந்தார்.

ஆனால் அவருக்கு மன்னிப்பு இல்லை. அதற்கு பதிலாக மன்னிப்பு வாரியம் தண்டனைகளை குறைத்துள்ளது.

நஜீப்பிற்கு அரச மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என அம்னோ தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

ஆனால் தற்போது மன்னிப்பு வழங்கப்படாதது அக் கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பில் ஆலோசிக்க அம்னோ உச்சமன்றம் இன்று காலை 11 மணிக்கு கூடவுள்ளது.

கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ அஹ்மத் ஜாஹித் ஹமிடி தலைமையில் இக் கூட்டம் நடைபெறவுள்ளது.

அம்னோவின் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகள் உட்பட பல விவகாரங்கள் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset