நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எஸ்பிஎம் தேர்வில் தமிழ் இலக்கியத் தேர்வு எழுத 12 மாணவர்களுக்கு அனுமதி இல்லை: கல்வியமைச்சு கவனிக்குமா?

பெடோங்:

எஸ்பிஎம் தேர்வில் தமிழ் இலக்கியத் தேர்வு எழுத 12 மாணவர்களுக்கு அனுமதி இல்லை என்ற விவகாரத்தை கல்வியமைச்சு கவனிக்குமா என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.

படிவம் 5 மாணவர்களுக்கான எஸ்பிஎம் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கெடா பெடோங் இடைநிலைப் பள்ளியைச் சேர்ந்த 12 இந்திய மாணவர்கள் தமிழ் இலக்கியத்தை தேர்வு பாடமாக தேர்ந்தெடுத்துள்ளனர்.

ஆனால் அம்மாணவர்களுக்கு தற்போது தமிழ் இலக்கியத் தேர்வை எழுதுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக தமிழ் இலக்கியத் தேர்வு வரும் பிப்ரவரி 7ஆம் தேதி நடைபெறவுள்ளது.

ஆனால் இதுநாள் வரை அம்மாணவர்களுக்கு அதற்கான பாரங்கள் கிடைக்கவில்லை.

இந்த விவகாரத்திற்கு பள்ளி தரப்பில் இருந்து பல காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.

இவ்விவகாரம் குறித்து அம்மாணவர்களின் பெற்றோர் கல்வி இலாகாவின் மேல்முறையீடு செய்துள்ளனர்.

மேலும் அரசு சாரா இயக்கங்களின் சார்பில் கல்வியமைச்சுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

ஆனால் இதுநாள் வரை இப்பிரச்சினைக்கு எந்தவொரு பதிலும் கிடைக்கவில்லை. தேர்வு நாள் நெருங்குவதால் அத்தேர்வை எழுத முடியாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் மாணவர்கள் உள்ளனர்.

ஆகவே இந்த விவகாரத்தில் கல்வியமைச்சின் நடவடிக்கை என்னவென்பது தான் அனைவரின் கேள்வியாக உள்ளது.

குறிப்பாக இந்த விவகாரத்தில் கல்வியமைச்சு தலையிட்டு உரிய தீர்வு வழங்க வேண்டும் எனபது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset