நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்தியாவில் பரவி வரும் நிப்பா வைரஸ்: மலேசிய எல்லைகளில் சுகாதாரக் கட்டுப்பாடுகள் தீவிரம்

புத்ராஜெயா:

இந்தியாவில் நிப்பா வைரஸ் தொற்றுகள் பதிவானதைத் தொடர்ந்து, மலேசியாவின் அனைத்து நுழைவுப் புள்ளிகளிலும் சுகாதாரக் கண்காணிப்பு நடவடிக்கைகள் கடுமையாக வலுப்படுத்தப்படும் என சுகாதார அமைச்சகம் (KKM) அறிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பு (WHO), சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து நிலைமையை நெருக்கமாக கண்காணித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

ஆபத்து மதிப்பீடுகள், அதிகாரப்பூர்வ தொற்றியல் தகவல்களின் அடிப்படையில் எல்லைகளில் சுகாதாரக் கட்டுப்பாடுகள் தொடர்ந்து பேணப்பட்டு, அவை தேவைக்கேற்ப அதிகரிக்கப்படும் என்றும் கூறப்பட்டது.

விமான நிலையங்கள், கடல் துறைமுகங்கள், நில எல்லைகள் உள்ளிட்ட அனைத்து நுழைவுப் பகுதிகளிலும், பயணிகளுக்கான சுகாதார கண்காணிப்பு, ஆபத்து அடிப்படையிலான பரிசோதனைகள், அறிகுறி உள்ளவர்களுக்கான தெளிவான பரிந்துரை நடைமுறைகள், அவசர மருத்துவ குழுக்களின் (EMT) தயார் நிலை ஆகியவை தொற்றுநோய் வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப செயல்படுவதாக அமைச்சகம் தெரிவித்தது.

கடந்த வெள்ளிக்கிழமை இந்தியாவின் மேற்கு மாநிலத்தில், தனியார் மருத்துவமனை ஒன்றின் சுகாதாரப் பணியாளர்களையும் உட்பட பலருக்கு நிப்பா வைரஸ் உறுதி செய்யப்பட்டு, 100-க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

உயிரிழப்பு விகிதம் உயர்ந்ததும், இதுவரை குறிப்பிட்ட சிகிச்சை இல்லாததும் காரணமாக, இந்த நோய் இந்திய சுகாதார அதிகாரிகளின் கவனத்தில் உள்ளது.

இந்த தகவல்களைத் தொடர்ந்து, எல்லைத் தாண்டிய பரவல் அபாயத்தை குறைக்கும் நோக்கில் சில ஆசிய நாடுகளும் தங்களது சுகாதாரக் கட்டுப்பாடுகளை கடுமைப்படுத்தியுள்ளன.

- கிரித்திகா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset