நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

8.6 சதவீத தொழிலாளர்கள் மாதத்திற்கு குறைந்தபட்சம் 10,000 ரிங்கிட் சம்பாதிக்கிறார்கள்

கோலாலம்பூர்:

நாட்டில் மொத்தம் 8.6 சதவீத முறையான தொழிலாளர்கள் செப்டம்பர் 2025 இல் 10,000 ரிங்கிட், அதற்கு மேல் மாத ஊதியம் பெற்றுள்ளனர்.

மலேசியாவின் தலைமை புள்ளிவிவர நிபுணர் டத்தோஸ்ரீ டாக்டர் முகமட் உசிர் மஹிடின் இதனை கூறினார்.

மொத்த முறையான தொழிலாளர்களின் எண்ணிக்கையில் 8.8 சதவீதம் பேர் செப்டம்பர் 2025 இல் 1,700 ரிங்கிட்டுக்கும் குறைவான மாத ஊதியத்தைப் பெற்றனர்.

இது செப்டம்பர் 2024 உடன் ஒப்பிடும்போது 13.5 சதவீத புள்ளிகள் குறைவு.

அதைத் தவிர, மலேசிய முறைசாரா தொழிலாளர்களில் மிகக் குறைந்த 10 சதவீதத்தினர் மாதத்திற்கு 1,700 ரிங்கிட் அல்லது அதற்கும் குறைவான மாத ஊதியத்தைப் பெறுகின்றனர்.

90 சதவீதத்தில் உள்ள முறைசாரா தொழிலாளர்கள் மாதத்திற்கு குறைந்தபட்சம் 9,000 ரிங்கிட் பெற்றதாக சதவீத பகுப்பாய்வு காட்டுகிறது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்





தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset