நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

முதலாம் வகுப்பில் சேரும் 6 வயது மாணவர்களுக்கு நோயறிதல் சோதனைகள் தேவையில்லை: பிரதமர்

கோலாலம்பூர்:

முதலாம் வகுப்பில் சேரும் 6 வயது மாணவர்களுக்கு நோயறிதல் சோதனைகள் எதுவுன் தேவையில்லை.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

2027 பள்ளி அமர்வு தொடங்கி ஆறு வயதுக்குட்பட்ட முதலாம் வகுப்பில் சேரும் மாணவர்களின் தகுதியை தீர்மானிக்க நோயறிதல் திரையிடல் சோதனைகள் செயல்படுத்தப்படாது.
அரசாங்கம் இதை ஒப்புக் கொண்டுள்ளது.

முன்மொழியப்பட்ட நோயறிதல் சோதனைகளை செயல்படுத்துவது உளவியல் ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

மேலும்  குழந்தைகள் மீது பாகுபாட்டை ஏற்படுத்தக்கூடும் என்ற கவலைகள் உட்பட, இந்த விஷயம் ஆய்வு செய்யப்பட்டது.

ஆரம்ப முன்மொழிவான நோயறிதல் சோதனை திட்டம் நன்றாக இருந்தது.

ஏனெனில் குழந்தைகள் பள்ளிக்குள் நுழைவதற்கு முன்பே ஒரு மதிப்பீட்டு முறை இருந்தது.

ஆனால் அது பாரபட்சமாக மாறும் என்று கருதப்பட்டது.

முதல் வகுப்பு, பாலர் பள்ளியில் சேர விரும்பும் குழந்தைகள் இருக்கிறார்கள்.

அவர்கள் தகுதியற்றவர்கள், அவர்கள் புத்திசாலிகள் அல்ல, பல உளவியல் விளைவுகள் இருக்கலாம். எனவே,

அது ரத்து செய்யப்படுகிறது. அதுதான் கல்வி அமைச்சரின் முன்மொழிவாகும்.

அது ரத்து செய்யப்பட்டு எளிமைப்படுத்தப்பட்டுள்ளது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன் என்று அவர் இன்று மக்களவையில் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset