நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட துன் மகாதீர் முதன் முறையாக பொதுவெளியில் தோன்றினார்

கோலாலம்பூர்:

முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதிர் முகமது சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு முதல் முறையாக பொதுவெளியில் தோன்றினார்,

இன்று டாமன்சாராவின் பவிலியன் வளாகத்தில் காஃபியை அவர் நிதானமாக அனுபவித்தார்.

மேலும் துன் டாக்டர் மகாதிர் பேரங்காடியில் உள்ள ஒரு ஓட்டலில் சக்கர நாற்காலியில் அமர்ந்திருப்பதைக் காண முடிந்தது.

இந்த நிகழ்வைப் பகிர்ந்து கொண்ட அவரது செய்தித் தொடர்பாளர் சூஃபி யூசோப்,

டாக்டர் மகாதீரின் சுருக்கமான வருகை அவரது மீட்பு செயல்பாட்டில் ஒரு முக்கியமான மைல்கல்லைக் குறித்தது.

அவர் பவிலியன் டாமன்சாராவில் காபியை ரசித்துக் கொண்டிருந்தார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 22 நாட்களுக்குப் பிறகு அவர் பொதுவில் வெளியே வருவது இதுவே முதல் முறை என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset