செய்திகள் மலேசியா
சொக்சோவின் 24 மணி நேர பாதுகாப்பு திட்டம் 2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் செயல்படுத்தப்படும்: டத்தோஸ்ரீ ரமணன்
கோலாலம்பூர்:
சொக்சோவின் 24 மணி நேர பாதுகாப்பு திட்டம் 2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் செயல்படுத்தப்படும்.
மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனை கூறினார்.
முழுமையான திட்டமிடல் செயல்முறை ஏற்கெனவே உள்ள திட்டங்களுடன் ஒருங்கிணைப்புக்குப் பிறகு இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.
இந்த முயற்சியை செயல்படுத்துவதற்கு தற்போது நடைபெற்று வரும் பிற சமூகப் பாதுகாப்புக் கொள்கைகள், திட்டங்களுடன் இணங்குவதை உறுதிசெய்ய கவனமாக நடவடிக்கைகள் தேவை.
ஆக முறையான ஆய்வுகளுக்கு பின் இத்திட்டம் அமலுக்கு என்று டத்தோஸ்ரீ ரமணன் கூறினார்.
இதனிடையே சொக்சோவின் தலைவர் டத்தோஸ்ரீ சுபஹான் கமல் கூறுகையில்,
இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டு அல்லது மூன்றாவது காலாண்டில் 24 மணி நேர பாதுகாப்பை செயல்படுத்த இலக்கு வைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் அல்லது மூன்றாவது காலாண்டில் இதை செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
கோலாலம்பூரில் நடைபெற்ற iLINDUNGi Sahabat Socso ஊடகவியலாளர்களுடனான மதிய உணவு நிகழ்ச்சிக்குப் பிறகு நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அவர் இவ்வாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 27, 2026, 8:16 pm
மாசடைந்த ஆறுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது: சுற்றுச் சூழல் அமைச்சர் ஆர்தர் ஜோஸப் குருப்
January 27, 2026, 7:58 pm
பயான் லெபாஸ் அடுக்குமாடி குடியிருப்பின் வாகன நிறுத்துமிடத்தில் தீ விபத்து: 9 வாகனங்கள் சாம்பலானது
January 27, 2026, 4:33 pm
பெட்டாலிங் ஜெயாவில் சூராவ் நிலம் ஆலயத்திற்கு வழங்கப்படவில்லை: ஃபஹ்மி
January 27, 2026, 4:32 pm
8.6 சதவீத தொழிலாளர்கள் மாதத்திற்கு குறைந்தபட்சம் 10,000 ரிங்கிட் சம்பாதிக்கிறார்கள்
January 27, 2026, 4:28 pm
முதலாம் வகுப்பில் சேரும் 6 வயது மாணவர்களுக்கு நோயறிதல் சோதனைகள் தேவையில்லை: பிரதமர்
January 27, 2026, 4:25 pm
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட துன் மகாதீர் முதன் முறையாக பொதுவெளியில் தோன்றினார்
January 27, 2026, 1:02 pm
இந்தியாவில் பரவி வரும் நிப்பா வைரஸ்: மலேசிய எல்லைகளில் சுகாதாரக் கட்டுப்பாடுகள் தீவிரம்
January 27, 2026, 12:40 pm
