செய்திகள் மலேசியா
உணவகத்தில் தாக்குதல்: ஆடவர் உயிரிழப்பு
பட்டர்வொர்த்:
கம்பூங் ஜாவா பகுதியில் உள்ள உணவகம் (Medan Selera) - இல் ஆடவர் ஒருவர் அங்குள்ள வீதியில் தங்கியிருந்த நபரால் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, மருத்துவமனையில் 24 மணி நேர சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
60 வயது நிரம்பியவர் என நம்பப்படும் அந்த நபர், சந்தேக நபரால் தாக்கப்பட்டதில் விலா எலும்புகள் முறிந்த நிலையில், கடந்த நாளுக்கு முந்தைய தினம் அதிகாலை சுமார் 2.48 மணிக்கு செபராங் ஜெயா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக வடக்கு செபரங் பேராய் மாவட்ட காவல்துறை தலைவர், உதவி ஆணையர் அனுவார் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.
“பிரேத பரிசோதனையில், தாக்கப்பட்ட அவ்வாடவரின் இடது பக்க விலா எலும்புகளில் முறிவு ஏற்பட்டிருந்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, விசாரணைக்கு உதவுவதற்காக 40 வயதான ஆடவர் ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
“விசாரணையில், கைது செய்யப்பட்ட நபர் போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
“இந்த வழக்கு குற்றச் சட்டத்தின் 325ஆம் பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது,” என்றும் அவர் கூறினார்.
இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த பொதுமக்கள், விசாரணைக்கு உதவ முன்வருமாறு போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
- சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
January 27, 2026, 1:02 pm
இந்தியாவில் பரவி வரும் நிப்பா வைரஸ்: மலேசிய எல்லைகளில் சுகாதாரக் கட்டுப்பாடுகள் தீவிரம்
January 27, 2026, 10:55 am
மலேசியாவில் கிளைபோசேட் என்ற களைக்கொல்லி தடை செய்யப்பட வேண்டும்: பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்
January 26, 2026, 11:14 pm
பிலிப்பைன்ஸ் கடலில் பெரும் விபத்து: பயணிகள் கப்பல் மூழ்கியது
January 26, 2026, 11:00 pm
மூன்று வயது சிறுமியின் கொலை முயற்சி வழக்கு: தந்தைக்கு நீதிமன்றம் ஜாமீன் மறுப்பு
January 26, 2026, 10:52 pm
பேராவில் 11 ஆலயங்களில் தைப்பூச விழா ஆகம முறைப்படி நடைபெற வேண்டும்; மதுபான விற்பனைக்குத் தடை: சிவநேசன்
January 26, 2026, 10:44 pm
இளையோர் பாதுகாப்புக்கு புதிய சட்டம்: சமூக ஊடகப் பயன்பாட்டிற்கு 16 வயது வரம்பு நிர்ணயம்
January 26, 2026, 9:27 pm
வீணடிக்கப்பட்ட, திருடப்பட்ட கூடுதல் நிதியை திரும்பப் பெற முடியும்: பிரதமர் நம்பிக்கை
January 26, 2026, 7:05 pm
