நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியாவில் பொங்கல் ஒற்றுமை விழாவாக  கொண்டாடப்பட வேன்டும்: தாமோதரன்

கோலாலம்பூர்: 

நமது பாரம்பரியத்தை தொடர்ந்து பாதுகாக்கும் நோக்கில் பொங்கல் விழா பரவலாக கொண்டாடப்பட வேண்டும்.

குறிப்பாக மலேசியாவில் இந்த பொங்கல் ஒற்றுமை விழாவாக கொண்டாடப்பட வேண்டும் என்று பேரின்பம் மலேசியா இயக்கத்தின் தலைவர் யு. தாமோதரன் கூறினார்.

பேரின்பம் மலேசியா ஏற்பாட்டில் பொங்கல் தமிழர் திருநாள் விழா செராஸில் சிறப்பான முறையில் நடைபெற்றது.

பொங்கல் வைக்கப்பட்டதுடன் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளும் இந்த நிகழ்வில் இடம் பெற்றிருந்தன.

சுற்று வட்டார மக்கள் இந்நிகழ்வில் திரளாக கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் பேசிய தாமோதரன், பொங்கலுக்கு சமய விழா என முத்திரை குத்தக் கூடாது. காரணம் பொங்கல் உழவர், அறுவடை திருவிழாவாகும்.

May be an image of 5 people and temple

மலேசியாவில் அதை ஒற்றுமை விழாவாக கொண்டாடப்பட வேண்டும்.

குறிப்பாக பல்லின மக்கள் இந்த பொங்கல் விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset