நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அரசாங்கத்தில் இருக்கும் போது கலை நிகழ்ச்சிகளை ரத்து செய்ய பாஸ் ஒருபோதும் அழுத்தம் கொடுக்கவில்லை: கைரி

கோலாலம்பூர்:

பாஸ் கட்சி அரசாங்கத்தில் இருந்தபோது கலை நிகழ்ச்சிகளை ரத்து செய்ய வேண்டும் என்று ஆக்ரோஷமாக வலியுறுத்தவில்லை .

முன்னாள் அமைச்சர் கைரி ஜமாலுடின் இதனை தெரிவித்தார்.

மொஹைதின் யாசின், இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தலைமையிலான நிர்வாகத்தின் கீழ் நான்  அமைச்சராக இருந்தேன்.

அந்த அரசாங்கத்தில் பாஸ் கட்சியும் இடம் பெற்றிருந்தது.

கலை நிகழ்ச்சிகளுக்கு அதற்கு முன்னர் இஸ்லாமியக் கட்சி எதிர்ப்பு தெரிவித்து வந்தது.

ஆனால் அரசாங்கத்தில் இருந்தபோது ஒருமுறை மட்டுமே இந்த விஷயத்தைத் தொட்டது என்று கைரி கூறினார்.

கோவிட் -19 தொற்று நோயைத் தொடர்ந்து பொருளாதாரத்தை புத்துயிர் பெற செய்ய அரசாங்கம் முடிவு செய்த பின்னர் இது நடந்தது.

மேலும் இது உஸ்தாஸ் இட்ரிஸ் அஹ்மத்தின் மிகவும் பயமுறுத்தும் தலையீடு.

அப்போது அவர்  மத விவகார அமைச்சராக இருந்தார் என்று கைரி கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset