நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆவணம் இல்லாத அந்நிய நாட்டினரை திருப்பி அனுப்பும் திட்டம்; மார்ச் 1 ஆம் தேதி தொடங்கும்: சைபுடின்

புத்ராஜெயா:

ஆவணங்கள் இல்லாத அந்நிய நாட்டினருக்கு எதிராக வழக்குத் தொடரப்படாமல் வீடு திரும்புவதற்கான திட்டத்தை மார்ச் 1 முதல் அரசாங்கம் தொடங்கும்.

இதனை உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுதின் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

ஆவணமற்ற தொழிலாளர்கள் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்ப விரும்பும் குடிவரவு குற்றங்களுக்கான கூட்டு அபராதத் தொகையைத் தீர்ப்பதற்குப் பிறகு அவ்வாறு செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விவகாரம் முடிவு செய்யப்பட்டது.

பயண ஆவணங்கள் இல்லாமல் நாட்டிற்குள் நுழைவது, குடியேற்ற விதிமுறைகளை மீறுவது மற்றும் அதிக காலம் தங்குவது உட்பட ஒவ்வொரு குடிவரவு குற்றத்திற்கும் 300 ரிங்கிட் முதல் 500 ரிங்கிட் வரையில் அபராதம் விதிக்கப்படும்.

முன்னதாக அரசாங்கம் தொழிலாளர் மறுசீரமைப்பு திட்டத்தை செயல்படுத்தியது.

இது முதலாளிகள் தங்கள் தொழிலாளர் தேவைகளை பூர்த்தி செய்ய ஆவணமற்ற வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு விண்ணப்பிக்க அனுமதித்தது.

இத்திட்டம் கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதியுடன் முடிவடைந்தது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset