நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிட்காயின் முதலீட்டில் மோசடி: மூதாட்டிக்கு 115,000 வெள்ளி இழப்பு

சிரம்பான் :

பிட்காயின் முதலீட்டின் வாயிலாக எக்ஸர்எக்ஸ் முதலீட்டு தளத்தின் வாயிலாக மூதலீடு செய்து தனது சேமிப்புத் தொகையான 115,000 வெள்ளியை மூதாட்டி இழந்துள்ளார். 

முகநூலில் வெளியான எக்ஸர்எக்ஸ் முதலீட்டுத் திட்டம் தொடர்பான விளம்பரத்தால் இல்லத்தரசியான 60 வயதான மூதாட்டி ஈர்க்கப்பட்டதாக போர்ட்டிக்சன் மாவட்டப் போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் அய்டி ஷாம் முஹமத் கூறினார்.

இதனைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் வாட்ஸ்ஆப் மூலம் ஆடவர் ஒருவரைத் தொடர்பு கொண்ட அந்த மூதாட்டி முதலீட்டு நோக்கத்திற்காகத் தனது சேமிப்புத் தொகையான 115,000 வெள்ளியைக் கடந்தாண்டு டிசம்பர் மாதம் 19 முதல் இவ்வாண்டு ஜனவரி 12ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் ஆறு பரிவர்த்தனைகள் மூலம் ஐந்து வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பியதாக அவர் குறிப்பிட்டார்.

அந்த முதலீட்டின் வாயிலாகக் கிடைத்த லாபம் தனது எக்ஸர்எக்ஸ் செயலியில் சேர்க்கப்பட்ட போதிலும் கூடுதலாகப் பணம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கை காரணமாக அந்த லாபத் தொகையை அம்மூதாட்டியினால் எடுக்க இயலாது போனது என்று அவர் ஓர் அறிக்கையில் குறிப்பிட்டார்.

தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த மூதாட்டி கடந்த மாதம் 26-ஆம் தேதி காவல்துறையிடம் புகார் செய்ததாக அய்டி தெரிவித்தார்.

இந்த மோசடிச் சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 420 பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset