நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

முடக்கப்பட்ட கணக்குகள் மீது நீதித்துறை மறுஆய்வுக்கு அமான் பாலஸ்தீன் வின்ணப்பம்

கோலாலம்பூர்: 

கடந்த ஆண்டு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் 11 வங்கிக் கணக்குகளை முடக்கியதற்கு எதிராக அமான் பாலஸ்தீன் நிறுவனம் நீதிமன்ற மறுஆய்வுக்கு விண்ணப்பித்துள்ளது. 

நேற்று தாக்கல் செய்யப்பட்ட மனுவில், பணமோசடி தடுப்பு, பயங்கரவாத எதிர்ப்பு நிதியுதவி மற்றும் வருமானத்தின் கீழ் நவம்பர் 24-ஆம் தேதி எம்ஏசிசி முடக்கியது. 

அந்த உத்தரவை எம்ஏசிசி நீக்க வேண்டும் என்று அமான் பாலஸ்தீன் நிறுவனம் கேட்டுக் கொண்டது. 

வங்கிக் கணக்குகளில் 11 மில்லியனை முடக்கியதை உடனடியாக நீக்குவதற்கு நீதிமன்றத்திடம் அமான் பாலஸ்தீன் நிறுவனம் கோரியது.

இதன் மூலம் இந்த நிதியை தினசரி செலவுகள், சம்பளம், நிர்வாகக் கட்டணம் மற்றும் பாலஸ்தீனியர்களுக்கு அடுத்த மூன்று மாதங்களில் உதவிக்கு பயன்படுத்த முடியும்.

கடந்த டிசம்பரில் அமான் பாலஸ்தீன் அரசு சாரா அமைப்பு 70 மில்லியனை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் விசாரணையின் ஒரு பகுதியாக, அமான் பாலஸ்தீனுக்கும் மற்றும் பல நிறுவனங்களுக்கும் சொந்தமான 41 வங்கிக் கணக்குகளை எம்ஏசிசி முடக்கியது.

சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அமான் பாலஸ்தீன் பணத்தை அனுப்பியதாக விசாரணையில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு எம்ஏசிசி சட்டம் 2009, பணமோசடி தடுப்பு, பயங்கரவாத நிதியுதவி மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளின் வருவாய் சட்டம் 2001 மற்றும் தண்டனைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் விசாரிக்கப்படுகிறது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset