நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கடந்த ஆண்டு 700 மில்லியன் வெள்ளி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் 

கோலாலம்பூர்:

கடந்த ஆண்டு நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட பல சோதனை நடவடிக்கைகளில் மொத்தம் 704.9 மில்லியன் வெள்ளி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது என்று காவல்துறை ஆனையர் டத்தோஸ்ரீ முஹமத் கமாருடின் முஹமத் டின் கூறினார். 

நாடு முழுவதும் உள்ள 273 சிண்டிகேட்டுகள், 22 மருந்து ஆய்வகங்களைச் சோதனை செய்ததில் 704.9 மில்லியன் வெள்ளி மதிப்புள்ள போதைப்பொருட்களைக் காவல்துறை கைப்பற்றியதாகப் புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநருமான அவர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு கடத்தல், துஷ்பிரயோகம் உட்பட பல்வேறு போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக 179,865 நபர்களை கைது செய்துள்ளனர். 

அதற்கு மேல், சிறப்பு தடுப்பு நடவடிக்கைகள் 1985 இன் பிரிவு 3(1) இன் கீழ் 1,012 நபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.

ஓப்ஸ் பூசாட் ஹிபுரான் சிறப்பு நடவடிக்கையின் போது 4,867 நபர்கள் தடுத்து வைக்கப்பட்டதாகவும் 1,705 சோதனைகள் நடத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டவர்களில் 7,403 கடுமையான போதைக்கு அடிமையானவர்கள் ஆபத்தான போதைப்பொருள் சட்டம் 1952 இன் பிரிவு 15(1)(a) இன் கீழ் மீண்டும் குற்றவாளிகளாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். 

பல்வேறு போதைப்பொருள் குற்றங்களுக்காக 621 அரசு ஊழியர்களைத் தடுத்து வைத்துள்ளோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மொத்தம் 73,364 புலனாய்வு ஆவணங்களைத் திறக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார். 

கடந்த ஆண்டு  வழக்கு விசாரணை 95.16% விகிதமாகும்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset