நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டான்ஶ்ரீ அந்தஸ்து கொண்ட நபரின் வங்கி கணக்கை எம்.ஏ.சி.சி முடக்கியது 

கோலாலம்பூர்: 

டான்ஶ்ரீ அஸ்தஸ்து கொண்ட பிரபல வர்த்தகர் சம்பந்தப்பட்ட சில வங்கி கணக்குகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் முடக்கியுள்ளது. 

2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் அரசாங்க வாகனங்கள் குத்தகையில் நிகழ்ந்த ஊழல் தொடர்பாக மலேசிய ஊழல் தடுப்பு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. 

மேலும், அந்த வர்த்தகரின் வீடு, நிறுவனங்களிலும் எம்.ஏ.சி.சி அதிகாரிகள் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். 

டான்ஶ்ரீ அந்தஸ்து கொண்ட அவர் மில்லியன் ரிங்கிட் பணத்தை கொண்டிருந்ததாகவும் 100க்கும் மேற்பட்ட தனிபட்ட வங்கி கணக்குகள், நிறுவனங்களின் கணக்குகளையும் கொண்டிருந்ததாக எம்.ஏ.சி.சி ஓர் அறிக்கையின் வாயிலாக கூறியது. 

இந்த விவகாரம் தொடர்பாக சில முக்கிய நபர்களிடமும் எம்.ஏ.சி.சி வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளது. 2009ஆம் ஆண்டு மலேசிய ஊழல் தடுப்பு சட்டம் செக்‌ஷன் 17யின் கீழ் இந்த விவகாரம் விசாரிக்கப்படுவதாக எம்.ஏ.சி.சியின் மூத்த அதிகரி ஹிஷாமுடின் ஹஷிம் தெரிவித்தார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset